business

img

ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை...

சென்னை:
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில் சனியன்று ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சம் பேர் வீடு மற்றும் மருத்துவமனையில் தனிமையில் உள்ளனர். ஆக்சிஜன், படுக்கை வசதிகள் குறித்த பயம் அதிகரித்துக்கொண்டே வருகிறது, மறுபுறம் தடுப்பூசிபோடுவோர் வந்தாலும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்றால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலான நிலையில் பொதுமக்கள் வருமானம் பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இத்தனை களேபரங்கள் இடையேயும் மதுபானப் பிரியர்கள் தங்கள் மது அருந்தும் போக்கை கைவிடவில்லை என்பதை இந்நிகழ்வு காட்டுகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, மீண்டும் கட்டுப்பாடுகள், ஞாயிறு முழு ஊரடங்கு என அரசுஅறிவித்தது. இதையடுத்து காய்கறி, மளிகை சாமான்கள் வாங்கும் கடைகளில்கூட்டம் அலைமோதியது.இதேபோல், சனிக்கிழமையன்று பண்டிகைக்காலங்களில் விற்பனை ஆவது போன்று மதுபான விற்பனை ரூ.252 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் ரூ.58.37 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது. மதுரை மண்டலத்தில் ரூ.49.43 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.48.57 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.48.32 கோடிக்கும், சேலம்மண்டலத்தில் ரூ.47.79 கோடிக்கும் எனமொத்தம் ரூ.252 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

;